'யானை' படத்தின் தமிழக உரிமை விற்பனை
ADDED : 1342 days ago
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யானை'. அருண் விஜய்யின் 33வது படமான இப்படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா, யோகிபாபு, ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, புகழ், அபிராமி அம்மு ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை கே.கே.ஆர் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .