ஆதியை திருமணம் செய்யும் நிக்கி கல்ராணி?
ADDED : 1294 days ago
மிருகம் , ஈரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் ஆதி. இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான கிளாப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணியை ஆதி காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . இருவரும் இணைந்து மரகத நாணயம் , யாகாவாராயினும் நா காக்க ஆகிய படங்களில் நடித்துள்ளனர் .ஆதியும் , நிக்கி கல்ராணியும் ஒன்றாக பொதுநிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்கள் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் அடிக்கடி பேசப்படுவது குறிப்பிடத்தக்கது .