ஜென்டில்மேன்- 2 படத்தில் நாயகியாக நடிக்கும் நயன்தாரா
ADDED : 1338 days ago
1993-ல் ஷங்கர் இயக்கிய முதல் படம் ஜென்டில்மேன். அர்ஜுன், மதுபாலா நடித்த இந்த படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தான் தயாரிக்க இருப்பதாக கே.டி. குஞ்சுமோன் அறிவித்திருந்தார். பாகுபலி படத்தின் இசை அமைப்பாளரான மரகதமணி இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் இந்த படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் சில தினங்களில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.