சமூகவலைத்தளங்களில் பெயரை மாற்றிய ஐஸ்வர்யா
ADDED : 1343 days ago
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பிறகு அன்கித் திவாரி இசையமைப்பில் முஸாபிர் என்கிற பாடல் விடியோவை சமீபத்தில் இயக்கி வெளியிட்டார் ஐஸ்வர்யா. சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். மேலும் பாலிவுட்டிலும் புதிய படத்தை இயக்குகிறார். அதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதனிடையே தனுஷ் - ஐஸ்வர்யாவை சமாதானம் செய்யும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இருவரும் தாங்கள் பிரிவதில் உறுதியாக உள்ளனர். இதுநாள் வரை சமூகவலைதளங்களில் தனது பெயரை ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்று தான் குறிப்பிட்டு இருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது தனுஷ் பெயரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.