நடிகர் சங்க அறக்கட்டளையில் கமல்ஹாசன்
ADDED : 1390 days ago
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணிக்கு கமல்ஹாசன் நேரடியாகவே ஆதரவு தெரிவித்தார். அதனால் கடந்த நிர்வாகத்தின் போது அவர் நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். இப்போது பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மீண்டும் கமல்ஹாசன் நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க விதிமுறைகளின்படி நடிகர் சங்க அறக்கட்டளையின் தலைவராக நாசர் நியமிக்கப்பட்டுள்ளார் அவருடன். கமல்ஹாசன், பூச்சி முருகன், ராஜேஷ், லதா, கோவை சரளா, சச்சு ஆகியோரும் நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.