சரத்குமார் நடிக்கும் 'என்கவுன்டர்'
ADDED : 1340 days ago
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'என்கவுன்டர்' படத்தை இயக்குனர் எஸ்.டி.வேந்தன் இயக்கியுள்ளார். வேளச்சேரி துப்பாக்கி சூடு சம்பத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் சரத்குமார் கையில் துப்பாக்கி உடன் போஸ் கொடுக்கும் போட்டோ இடம் பெற்றுள்ளது. மேலும் படத்தின் தலைப்பான என்கவுன்டர் துப்பாக்கி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் என்கவுன்டர் @ 152 பிளாக் என இடம் பெற்றுள்ளது.