மாஸ்டர் மகேந்திரனின் படத்திற்கு பின்னணி பாடிய ஜி.வி. பிரகாஷ் குமார்
ADDED : 1290 days ago
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் பிரசாந்த் நாகராஜன் என்பவர் இயக்கத்தில் அமீகோ கேரேஜ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரனுடன், ஜி.எம்.சுந்தர் தசரதி, தீபா பாலு, உதயா, மதன் கோபால் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ் குமார் மற்றும் குக் வித் கோமாளி சிவாங்கி ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் அமீகோ கேரேஜ் படத்தின் இரண்டாவது மெலோடி பாடல் என்று படக்குழு தெரிவித்துள்ளது.