ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவோடு பிறந்தநாள் கொண்டாடிய ராம் சரண்
ADDED : 1295 days ago
ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி. ஆர் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது வரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. நேற்று ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் ராஜமவுலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.