உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லால் பட ரிலீஸ் : ஜீத்து ஜோசப் புது அப்டேட்

மோகன்லால் பட ரிலீஸ் : ஜீத்து ஜோசப் புது அப்டேட்

மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தை இயக்கி வெற்றிப்படமாக மாற்றியதுடன் அதன் இரண்டாம் பாகத்தையும் அதே அளவு விறுவிறுப்புடன் இயக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை மோகன்லாலுக்கு கொடுத்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். திரிஷ்யம்-2 படத்தை இயக்குவதற்கு முன்னதாக மோகன்லாலை வைத்து ராம் என்கிற படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப், கொரோனா தாக்கம் காரணமாக அதன் படப்பிடிப்பை துவங்கிய சில நாட்களிலேயே நிறுத்திவிட்டார்.

திரிஷ்யம்-2 வெளியாகி முடிந்ததும் மீண்டும் மோகன்லாலை வைத்து டுவல்த் மேல் என்கிற புதிய படத்தை துவங்கிய ஜீத்து ஜோசப் அதையும் குறுகிய காலத்தில் முடித்துவிட்டார். ஒரு பக்கம் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனித்துக் கொண்டே இன்னொரு பக்கம் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இ

ந்த நிலையில் டுவல்த் மேன் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் ரிலீசுக்கு தயார் நிலையில் படம் இருப்பதாகவும் கூறியுள்ள ஜீத்து ஜோசப் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !