மேலும் செய்திகள்
'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்
1258 days ago
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
1258 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
1258 days ago
தமிழில் ஆளவந்தான், சாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். ஒருபக்கம் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானாலும் அதிலிருந்த போராடி மீண்ட ரவீணா, தற்போதும் படங்களில் தொடர்பு நடித்து வருகிறார். தற்போது கேஜிஎப் 2 படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவூட்டும் விதமாக ராமிகா சென் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவீணா டாண்டன்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தை மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரித்விராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விரைவில் வெளியாக இருக்கும் அவரது ஜன கண மன படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மம்தா மோகன்தாசும் அவருடன் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்வில் நடிகை ரவீனா டாண்டனை சந்தித்த மம்தா மோகன்தாஸ் ஒரு ரசிகையாக மாறிப்போய் அவருடன் சந்தோசமாக உரையாடியதுடன் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
1258 days ago
1258 days ago
1258 days ago