கார் விபத்தில் மலைகா அரோரா காயம்
ADDED : 1281 days ago
பாலிவுட் நடிகை மலைகா அரோரா நேற்று புனேயில் பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது காரில் மும்பை - புனே நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். மும்பையில் இருந்து 38 கி.மீ தொலைவில் மலைகாவின் காருக்கு முன்னாள் சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளது. இதனால், பின்னால் வந்த மலைகாவின் காரும் அதன் பின்னால் வந்த மற்றொரு வாகனமும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இதில் மூன்று வாகனங்களில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். மலைகா அரோராவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் அங்கிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலைகா அரோராவிற்கு நடிகர் சல்மான் கான் மகன் அர்பாஸ் கானுடன் திருமணம் நடந்த நிலையில், அவர்கள் 2017ம் ஆண்டு பிரிந்தனர். தற்போது மலைகா அரோரா, அர்ஜூன் கபூர் என்பவரை காதலித்து வருகிறார்.