யுவன் சங்கர் ராஜாவுடன் 12ஆவது முறையாக இணையும் விஷால்
ADDED : 1380 days ago
வீரமே வாகை சூடும் படத்தை அடுத்து லத்தி, மார்க் ஆண்டனி உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் விஷால். இதையடுத்து முத்தையா இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க போகிறார். இந்த நிலையில் தற்போது தனது ஒரு பதிவு போட்டுள்ளார் விஷால். அதில் லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகவும், 12ஆவது முறையாக அவருடன் இணைவதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பு விஷால் நடித்த சண்டக்கோழி, திமிரு, தீராத விளையாட்டுப் பிள்ளை, தாமிரபரணி, சமர், அவன் இவன், சண்டக்கோழி -2, வீரமே வாகை சூடும் உள்பட 11 படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.