உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / “ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு

“ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு

விஜய் ஆண்டனி நடிப்பில் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அவற்றில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‛‛ரத்தம்'' படமும் ஒன்று. மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, ஓஏகே சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கண்ணன் இசையமைக்கிறார்.

முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் ரத்தம் படத்தின் இந்திய படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில் துவங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !