ஒர்க்கவுட்டில் தீவிரமாக இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி
ADDED : 1281 days ago
18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த தனுஷும், ஐஸ்வர்யா ரஜினியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார்கள். அதையடுத்து வழக்கம்போல் தனுஷ் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயணி என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். அடுத்தபடியாக ஹிந்தி படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதோடு தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரை சந்திக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, தற்போது ஒர்க்கவுட் மற்றும் யோகா பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றையும் தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.