தங்க இதயம் கொண்ட சிங்கம் மனிதன் - தம்பியை புகழ்ந்த அண்ணன்
ADDED : 1277 days ago
நீண்ட இடைவெளிக்கு பின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ‛நானே வருவேன்'. இந்துஜா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட தனுஷ் போட்டோவை பகிர்ந்து, ‛‛நீண்ட காலமாக எங்களின் படங்களில் நாங்கள் பிஸியாக இருந்ததால் ஒருவரோடு ஒருவர் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நானே வருவேனில் இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்த மனிதன் தங்க இதயம் கொண்ட சிங்கம்'' என தெரிவித்துள்ளார்.