உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி லெஜண்ட்' படத்தின் முதல் பாடலை வெளியிட்ட பிரபல இயக்குனர்கள்

'தி லெஜண்ட்' படத்தின் முதல் பாடலை வெளியிட்ட பிரபல இயக்குனர்கள்

இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ‛தி லெஜண்ட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா லெஜெண்ட் சரவணனனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‛மொசலோ மொசலு' பாடலை பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், எஸ் எஸ் ராஜமவுலி, சுகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அர்பான் மாலிக் பாடியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !