கமல் தந்த சுதந்திரம் : லோகேஷ் பெருமிதம்
ADDED : 1274 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛விக்ரம்'. அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஜூன் 3ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடந்த சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசினார் லோகேஷ். பின்னர் விக்ரம் படம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛விக்ரம் படத்தில் எந்த இடத்திலும் கமல் தலையிடவில்லை. நான் கூட யோசனை கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்கும் அவர் இடம் அளிக்கவில்லை. இது உன்னோட படம் என்ன வேணாலும் செய் என முழு சுதந்திரம் தந்தார்'' என்றார்.