புதுப்பெண் போல ஜொலிக்கும் சம்யுக்தா
ADDED : 1274 days ago
பிக்பாஸ் பிரபலமான சம்யுக்தா, சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளார். சமூகவலைதளத்தில் அவர் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அழகான பட்டு லெஹங்காவில் புதுப்பெண் போல் இருக்கும் சம்யுக்தாவை ரசிகர்கள் ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். 'என்னை மேரேஜ் பண்ணிக்கோங்க' என அப்ளிகேஷனும் போட்டு வருகின்றனர்.
சம்யுக்தாவிற்கு திருமணமாகி ஏற்கனவே குழந்தையும் இருக்கிறது. மாடலிங், தொழிலதிபர், நியூட்ரிசியனிஸ்ட் என பன்முக திறமை கொண்ட சம்யுக்தா, இத்தனை கமிட்மெண்டுகளுக்கு மத்தியிலும் தனது குழந்தைக்கு நல்லதொரு தாயாக இருந்து வருவதால், ரசிகர்கள் அவர் மீது அதிக மரியாதையும் பாசமும் வைத்துள்ளனர். நடிக்க வேண்டும் கனவோடு மாடலிங் துறையில் நுழைந்த சம்யுக்தா தற்போது இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.