கர்ணன் படக்குழுவினரின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்
ADDED : 1275 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த படத்தில் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் 9ம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் 1 வருடத்தை நிறைவு பெற்றுள்ளது. அன்றைய தினமே நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். அதோடு தனுஷிற்கு கர்ணன் பட உருவச் சிலையையும் பரிசாக அளித்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஓராண்டை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறப்பு விருந்தை ஏற்பாடுசெய்து கர்ணன் படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் மற்றும் கர்ணன் பட உருவச்சிலையை தயாரிப்பாளர் தாணு வழங்கி உள்ளார்.