உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தி - சிவகார்த்திகேயன் படங்கள் நேருக்கு நேர் மோதல்

கார்த்தி - சிவகார்த்திகேயன் படங்கள் நேருக்கு நேர் மோதல்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கியுள்ள விருமன் படங்களில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி. அதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். போலீஸ் வேடத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் சிம்ரனும் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

அதுபோல் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 20வது படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா ரபோஷக்கா என்ற உக்ரைன் நாட்டு நடிகை ஜோடியாக நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜியும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தையும் ஆகஸ்ட் 12ல் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதனால் முதன்முறையாக கார்த்தி - சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள போகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !