டைகர் நாகேஸ்வரராவுக்காக 7 கோடியில் அரங்கம் அமைப்பு
ADDED : 1311 days ago
ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமாக உருவாகிறது டைகர் நாகேஷ்வரராவ். வம்சி இயக்கி வருகிறார். அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் கதை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை கலக்கிய பிரபல ரயில் கொள்ளைக்காரன் ஸ்டூவர்ட்புரம் டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கை தழுவியதாகும்.
இதற்கா 1970 களில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை 7 கோடி ரூபாய் செலவில் மறு உருவாக்கம் (ஷெட்) செய்து வருகிறார்கள். மகாநடி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய் படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய அவினாஷ் கொல்லா தலைமையில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஷம்ஷாபாத் அருகே 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.