8 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வெளியாகும் நஸ்ரியாவின் படம்
ADDED : 1264 days ago
தமிழில் நேரம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, நய்யாண்டி உள்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தற்போது தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு அடடே சுந்தரா என்று டைட்டில் வைத்துள்ளார்கள். காதல் மற்றும் காமெடி கதையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீசர் ஏப்ரல் 20ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் ஜூன் மாதம் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.