உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுதாவின் அடுத்த படம் அறிவிப்பு : கேஜிஎப் நிறுவனத்துடன் இணைகிறார்

சுதாவின் அடுத்த படம் அறிவிப்பு : கேஜிஎப் நிறுவனத்துடன் இணைகிறார்

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா. அடுத்து ஹிந்தியில் சூரரைப்போற்று படத்தை ரீ-மேக் செய்ய உள்ளார். இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளி வந்துள்ளது. கேஜிஎப் படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ், சுதாவின் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

இதுப்பற்றி அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‛‛சில உண்மை கதைகள் சொல்லப்பட வேண்டும். எங்களின் அடுத்த படத்தை சுதா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்த படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று நம்புகிறோம்'' என தெரிவித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படம் கேஜிஎப் போன்று பான் இந்தியா படமாக உருவாகும் என தெரிகிறது. விரைவில் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !