அஜித்தை தொடர்ந்து விஷால் படத்திலும் அண்ணாசாலை செட்
ADDED : 1347 days ago
வலிமை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்காக அங்குள்ள ஸ்டுடியோவில் சென்னையில் உள்ள அண்ணாசாலையின் செட் போடப்பட்டு படமாக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திற்காகவும் சென்னையில் 1970 களில் இருந்த அண்ணா சாலை செட் அமைக்கப்பட்டு வருகிறது. 1970 காலகட்டங்களில் நடக்கும் கதையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.