ஜெயம் ரவியின் இரு படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
ADDED : 1331 days ago
நடிகர் ஜெயம் ரவி தற்போது அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மண மற்றும் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் அஹமத் இயக்கத்தில் புதிய படமும், இயக்குனர் ராஜேஷ் படத்திலும் நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இவற்றில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது .
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .