ஜோடியாக கரகாட்டம் ஆடிய சீரியல் நடிகைகள்!
ADDED : 1260 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'சூப்பர் குயின்' என்கிற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகைகள் தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றனர். வாரம் ஒரு டாஸ்க் என வித்தியாசமான களத்துடன் இந்நிகழ்ச்சி வாராவாரம் அசத்தலான எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் இதில் போட்டியிட்டு வரும் சீரியல் நடிகைகளான வீஜே பார்வதி மற்றும் ஜனனி அசோக் குமார் இருவரும் சேர்ந்து கரகத்தை தலையில் வைத்து 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு அழகாக நடனமாடியுள்ளனர். இதன் குறு வீடியோவை இருவரும் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. இருவரது முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.