சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் வித்யா பிரதீப்
ADDED : 1267 days ago
நடிகை வித்யா பிரதீப் ஆரம்ப காலக்கட்டத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு நாயகி சீரியலில் நடித்து பிரபலமானார். இது அவருக்கு சினிமாவின் கதவுகளை திறக்க உதவியாயிருந்தது. அருண் விஜய்யின் தடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த அவர் தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதனால் அவர் மீண்டும் சின்னத்திரையில் தோன்றவேயில்லை. சமீபத்தில் வெளியான ‛செல்பி' படத்தில் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
எனினும், அவருக்கான ரசிகர் கூட்டம் அவரை இப்போது பின் தொடர்ந்து வருகின்றனர். சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் வித்யா தற்போது சிவப்பு நிற சேலையில் எழில் கொஞ்சும் அழகுடன் போஸ் கொடுத்து சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.