உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேஜிஎப்-2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய "ராக்கிபாய்"

கேஜிஎப்-2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய "ராக்கிபாய்"

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'கேஜிஎப் 2' படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. மேலும் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தார்கள்.

கேஜிஎப் படத்தை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது, கதாநாயகன் யஷ்-க்கு இயக்குநர் பிரசாந்த் நீலும் தயாரிப்பாளர் விஜய்யும் முத்தமிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !