மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1227 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1227 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த், விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்து 2007ம் வருடம் ஏப்ரல் 27ம் தேதி வெளிவந்த படம் 'சென்னை 600028'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சில பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு, இப்படி ஒரு படத்தைக் கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல், பெரிய கதை என எதுவும் இல்லாமல் வெறும் கிரிக்கெட்டையும், அது சம்பந்தப்பட்ட விளையாட்டான காட்சிகளையும் மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்போதைய இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. 100 நாட்களைக் கடந்து அமோகமாக ஓடியது.
அந்தப் படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்த வெங்கட் பிரபு தொடர்ந்து வெற்றிகரமான படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சென்னை 600028 II' படம் 2016ல் வெளிவந்து அப்படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
1227 days ago
1227 days ago