உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரையுலகம் சார்பில் அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழா

திரையுலகம் சார்பில் அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழா

செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆந்திர அரசியலில் குதித்த ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை தோல்வி அடைந்தார். இரண்டு முறை வெற்றி பெற்றார். தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகி உள்ளார். அவருக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற மே 7ம் தேதி சனிக்கிழமை இந்த விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !