திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி
ADDED : 1280 days ago
கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி. அடிக்கடி இருவரின் ரொமான்ட்டிக்கான படங்களை விக்னேஷ் சிவன் வெளியிடுவார். வெளியூர், வெளிநாடு சென்றால் அங்கிருந்தும் ரொமான்டிக் போட்டோக்களை பகிர்வார். சமீபகாலமாக கோயில் கோயிலாக இருவரும் சுற்றி வருகின்றனர். அந்தவகையில் இன்று(ஏப்., 28) திருப்பதியில் இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.