ராகவா லாரன்ஸின் அதிகாரம் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்
ADDED : 1271 days ago
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவர் வெற்றிமாறனின் கதையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிகாரம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வந்தது. தற்போது அதிகாரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதோடு இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.