கமல்ஹாசனுடன் இணைந்து கேஜிஎப் 2 பார்த்த இளையராஜா
ADDED : 1254 days ago
இசை அமைப்பாளர் இளையராஜா திரையரங்கில் படம் பார்ப்பது மிகவும் அபூர்வமானது. எப்போதோ ஒரு முறை தியேட்டருக்கு சென்று பார்ப்பது வழக்கம். ஆனால் முதன் முறையாக ஒரு மொழிமாற்று திரைப்படத்தை இளையராஜா தியேட்டரில் சென்று பார்த்துள்ளார். அது கேஜிஎப் சாப்டர் 2.
படத்திற்கு பெரிய அளவிலான பாராட்டு கிடைத்திருப்பதோடு வசூலையும் குவித்து வருவதால் படம் பற்றி இளையராஜாவும், கமல்ஹாசனும் விவாதித்துள்ளனர். இருவரும் இணைந்து படத்தை பார்க்க முடிவு செய்தனர். சென்னையில் உள்ள எஸ்கேப் திரையரங்களில் நேற்று இருவரும் படம் பார்த்தனர். முன்னதாக அவர்களுக்கு தியேட்டர் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
படத்தை பற்றி இருவரும் கருத்து சொல்லவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இருவரும் தங்களது கருத்து பதிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.