பரத நாட்டியம் ஆடிய வீடியோவை வெளியிட்ட லட்சுமிமேனன்
ADDED : 1262 days ago
கும்கி படத்தில் அறிமுகமான மலையாள நடிகை லட்சுமி மேனன், அதன் பிறகு சுந்தர பாண்டியன், ஜிகர்தண்டா, கொம்பன் என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் நடித்த றெக்க படத்திற்கு பிறகு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக கேரளாவில் நடனப்பள்ளி நடத்தி வந்தார் லட்சுமிமேனன். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புலிகுத்தி பாண்டி என்ற படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் தற்போது தான் பரதநாட்டியம் ஆடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் லட்சுமிமேனன். முன்பைவிட வெயிட் குறைத்து ஓரளவு ஸ்லிம்மாக மாறி உள்ள லட்சுமேனனின் இந்த பரத நாட்டிய வீடியோ வைரலானது.