ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் - பிரியங்கா
ADDED : 1351 days ago
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛டான்'. அனிருத் இசையமைத்துள்ளார். இரண்டு, மூன்று முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இப்போது மே 13ம் தேதி திரைக்கு வர உள்ளது.
படம் பற்றிய பிரியங்கா மோகன் நம்மிடம் கூறும்போது, ஒரு பெரிய ஹீரோ உடன் உடனே மீண்டும் படம் பண்ணுவது என்பது எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. எனக்கு கிடைத்துள்ளது. என்னிடம் ஏதோ திறமை உள்ளது என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கி உள்ளனர். நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வேன். ‛டான்' படம் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் பொழுபோக்கு அம்சம் நிறைந்த நல்ல படமாக இருக்கும்'' என்கிறார்.