விஜய் 66 படப்பிடிப்புக்காக ஐதராபாத் பறந்த விஜய்
ADDED : 1251 days ago
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் .
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் சென்னையில் துவங்கியது. விஜய்யுடன் நடிகர் சரத்குமார், ஷாம் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு விஜய் சென்றுள்ளார் . விமான நிலையத்தில் அவர் செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.