அமெரிக்காவில் மூன்று மொழிகளில் வெளியாகும் கமலின் விக்ரம்
ADDED : 1250 days ago
லோகேஷ் கனகராஜ் ஏக்கத்தின் கமல், விஜய் சேதுபதி, பகத், பாசில் உள்பட பலர் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வருவதால் தற்போது புரமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதோடு வருகிற மே மாதம் 15ஆம் தேதி விக்ரம் படத்தின் ஆடியோ டிரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் அமெரிக்கா வெளியீட்டு உரிமையை கேஜிஎப் -2 படத்தை வெளியிட்ட ஏபி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றிருக்கிறது. அதோடு ,அமெரிக்காவில் கமலின் விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.