வனிதா ஆரம்பித்த புது ஸ்டூடியோ
ADDED : 1249 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமாரின் வளர்ச்சி மிகவும் பாசிட்டிவாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி பிரச்னைக்குரிய நபராக வலம் வந்த வனிதா தற்போது நடிப்பு, தொழில் என வலம் வருகிறார். இந்நிலையில் தனது புதிய தொழில் குறித்து விரைவில் அறிவிக்கப் போவதாக அறிவித்திருந்த வனிதா தற்போது தற்போது பியூட்டி மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். அதற்கான நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களான சுரேஷ் சக்கரவர்த்தி, சிநேகன், தாடி பாலாஜி ஆகியோருடன் உமா ரியாஸ், கன்னிகா ரவி, காய்த்ரி ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்களை வனிதா தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். வனிதாவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களுடன் சேர்ந்து பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.