வெல்லும் திறமை : தமிழுக்கு வரும் ஹிந்தி ரியாலிட்டி ஷோ
ADDED : 1256 days ago
ஹிந்தி கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ 'ஹுனர்பாஸ்: தேஷ் கி ஷான்'. மிதுன் சக்ரவர்த்தி, பரினீதி சோப்ரா மற்றும் கரண் ஜோஹர் நடுவர்களாக இருந்து நடத்தும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தற்போது கலர்ஸ் தமிழ் சேனனில் 'வெல்லும் திறமை' என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது. நடனம், பாடல், வீரம், அறிவு இப்படி எந்த திறமையை வேண்டுமானாலும் வெளிப்படுத்துகிற நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்சிக்கான ஆடிசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்கிறவர்கள் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னணி தமிழ் நடிகர், ஒருவரும் நடிகை ஒருவரும் நடுவர்களாக இருந்து நடத்த இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.