35 வருடங்களுக்கு பிறகு உருவாகும் மவுனப்படம்: விஜய்சேதுபதி நடிக்கிறார்
ADDED : 1279 days ago
இந்தியாவில் சினிமா அறிமுகமாகும்போது மவுனப் படங்கள்தான் வெளிவந்தது. அதன் பிறகுதான் பேசும் படங்கள் வந்தன. 1987ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான மவுனப்படத்தின் டைட்டில் 'பேசும்படம்'. தெலுங்கில் 'புஷ்பக விமானம்'. இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார். இதில் மற்ற ஒலிகள் கேட்கும் கேரக்டர்கள் மட்டும் பேச மாட்டார்கள். அதன்பிறகு அப்படியான முயற்சியை யாரும் செய்யவில்லை.
தற்போது 35 வருடங்களுக்கு பிறகு 'காந்தி டாக்ஸ்' என்ற மவுனப்படம் உருவாகிறது. இந்தியில் தயாராகும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, அதிதிராவ் நடிக்கிறார்கள். மவுனப்படம் என்பதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது.