மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள 'ரிப்பப்பரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1261 days ago
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், மாஸ்டர் படத்திற்கு பிறகு ‛அறிண்டம்' ,'அர்த்தம்' ,'கரா', 'அமிகோ கேரேஜ்' , இயல்வது கரவேல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு அடுத்து இயக்குனர் ஏகே இயக்கத்தில் 'ரிப்பப்பரி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஹேந்திரனுக்கு ஜோடியாக காவ்யா அறிவுமணி நடிக்கிறார். இந்த படத்தை அருண் கார்த்திக் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.