என்ன ஆச்சு ஜூலிக்கு? மருத்துவமனைக்கு எதற்கு சென்றார்?
ADDED : 1255 days ago
பிக்பாஸ் பிரபலமான ஜூலி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு மீடியாவில் ஏற்பட்ட அவப்பெயரை துடைத்துக் கொண்டார். தற்போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜூலி திடீரென தனது சமூக வலைதளப் பக்கத்தில், மருத்துவமனையில் நோயாளிகள் அணிந்திருக்கும் உடையை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜூலிக்கு என்ன ஆச்சு என பதறிப்போய் கேட்டு வருகின்றனர். ஆனால், அவரது உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கண்ணாடி அணியாமல் இருக்க கண்களுக்கு பலரும் செய்யும் லேசிக் என்ற சிகிச்சையை தான் ஜூலி தற்போது செய்துள்ளார். மேலும், “எனது கண்களின் நலம் பற்றி அக்கறையுடன் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என கூறியும் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.