ஷாருக்கானுடன் நடிக்கும் யோகிபாபு
ADDED : 1255 days ago
அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கிய நிலையில் ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் நிறுத்தப்பட்டது. படம் கைவிடப்பட்டதாகவும் வதந்தி பரவியது.
இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் நயன்தாராவும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்தில் யோகிபாபுவும் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் யோகிபாபுவிடம், ஷாருக்கான் படத்தில் நடிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆம் நடிக்கிறேன் என்று யோகிபாபு பதில் அளித்துள்ளார்.