உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜிவி பிரகாஷின் 'ஐங்கரன்' பட இறுதி ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்

ஜிவி பிரகாஷின் 'ஐங்கரன்' பட இறுதி ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்துவருகிறார். 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் 'ஐங்கரன்'. இந்த படத்தை 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமரே இசையமைத்துள்ளார். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இப்படம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதி தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். வரும் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !