பிரபாசுடன் இணையும் திஷா பதானி
ADDED : 1247 days ago
நடிகையர் திலகம் (மகாநடி) படத்திற்காக தேசிய விருது பெற்ற நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் ப்ராஜக்ட் கே. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார், அமிதாப்பச்சன் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
இந்த படத்தின் இன்னொரு நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். இதனை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தீபிகா படுகோன் இருக்கும் நிலையில், திஷா பதானியையும் இணைத்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காரணம் திஷா பதானி கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் புகழ்பெற்றவர். கவர்ச்சி படங்களால் தனது சமூக வலைத்தளத்திறகு கோடிக் கணக்கில் ரசிகர்களை வைத்திருப்பவர்.