மகனுடன் போட்டோஷூட் நடத்திய பரீனா : வைரல் புகைப்படங்கள்
ADDED : 1326 days ago
சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத், பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அதிகம் பிரபலமானார். அந்த தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் போதே கர்ப்பமான அவர், தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் மெட்டர்னிட்டி ஷூட் என பெருகி வரும் புதிய கலச்சாரத்தில் நிறைமாத வயிறுடன் தினுசு தினுசாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினார். இதற்கு பலவிதமாக விமர்சனங்கள் வந்தன. அதையெல்லாம் கடந்து வந்து இன்று பரீனா தனது மகனுக்கு நல்லதொரு தாயாக இருந்து வருகிறார். அன்னையர் தினத்தை முன்னிட்டு பரீனா, தனது மகன் சயனுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பப்ளியாக அழகாக இருக்கும் பரீனாவின் மகனுக்கும் தற்போது தனி ரசிகர் கூட்டம் உள்ளது.