மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1214 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1214 days ago
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சிகரமான நடிப்பால் பரபரப்பை ஏற்படுத்தியவர் நமீதா. சில வருடங்களுக்கு முன்பு வீரேந்திரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நமீதா சில போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய தாய்மை பற்றிய பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
தாய்மை…புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன். மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது விழும் போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர்கள் என்னை அழைக்கிறது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காகத்தான் இவ்வளவு காலம் பிரார்த்தித்தேன். உனது மென்மையான உதைகள், படபடப்புகள் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
நடிகை நமீதா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் தனது கர்ப்பம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நமீதா. பிறந்தநாளோடு, கர்ப்பத்திற்கும் சேர்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1214 days ago
1214 days ago