சென்னையில் மெக்சிகன் திரைப்பட விழா
ADDED : 1248 days ago
புது டில்லியில் உள்ள மெக்சிகோ தூதரகமும், இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும் இணைந்து சென்னையில் மெக்சிகன் திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று (மே.10) தொடங்கும் இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை நடக்கும் இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு மெக்சிகோவுக்கான சென்னை தூதர் ராம்குமார் வரதராஜன் துவக்கி வைக்கிறார். சேம்பர் செயலாளர் ரவி கொட்டாரக்கரா, நடிகர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் அரங்கில் துவக்க விழாவும் படங்கள் திரையிடலும் நடக்கிறது. மக்குனிரியா பனமரிக்கனா, லியோனா, சிரிய பர்ச்சோஸ், மாஸ் அமன்சரஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற மெக்சிகன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.