46 வயதிலும் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நாயகி
ADDED : 1341 days ago
சமூகவலைதளம் என்றாலே சில நடிகைகளின் விதவிதமான புகைப்படங்களைப் பார்க்கலாம். இள வயது நடிகைகள் பலரும் பலவிதமான கிளாமர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான். ஆனால், நடுத்தர வயது நடிகைகள் கூட அப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது ஆச்சரியம்தான்.
விஜய் நடித்து 2003ல் வெளிவந்த 'புதிய கீதை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அமிஷா பட்டேல். ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சில ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களை வைத்துள்ள அமிஷா இந்த வயதிலும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். கிளாமருக்கும், கவர்ச்சிக்கும் வயது ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார் அமிஷா.