சல்மான் கான் படத்தில் நடிக்கும் நயன்தாரா?
ADDED : 1350 days ago
நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இரண்டாவதாக ஒரு பாலிவுட் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .